இப்படியே செல்ல ஒரு நாள் நான் என்னுடைய வீட்டு பாடத்தை முடிக்காததால் எனக்கு தண்டனை கொடுக்கப்பட்டது அது என்ன வென்றார் வகுப்பறைக்கு வெளியே முட்டி போட்ட அந்த வீட்டு படத்தை முடிப்பது நானும் என் நண்பனும் அதை செய்து கொண்டிருந்தோம் அதேநேரம் அவள் பக்கத்து அறையில் இருந்தாள் அவள் எதற்காவது வெளியே வருவாள் என காத்துக்கொண்டிருந்தேன் ஆனா நான் எழுதி முடித்த பிறகும் அவள் வரவில்லை முடித்த அந்த வீட்டு பாடங்களை அந்த ஆசிரியரிடம் கொண்டு சேர்க்க ஆசிரியர்கள் அறைக்கு சென்றோம் அங்கு கொடுத்துவிட்டு வெளிய வந்து அங்கிருந்து என்னுடைய வகுப்பறைக்கு செல்லும் வழியில் நானும் என் நண்பனும் நடந்து செல்கிறோம் செல்லும் வழியில் எதிரே பார்த்தால் அவள் நடந்து வருகிறாள் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை நான் இதுவரை அவளுக்கு நேராக கடந்து சென்றது இல்லை அப்படி ஏதாவது நடக்க இருந்தாள் திரும்பினான் பின்பக்கமாக ஓடி விடுவேன் அதையே இப்பொழுதும் செய்ய திரும்பினேன் பின்னால் வழியில்லை வெறும் ஆசிரியர்களின் அரை மட்டுமே உள்ளது வேறு வழியில்லை நேருக்கு நேராக சென்று அவனை கடந்து தான் செல்ல வேண்டும் மனதில் இருக்கும் பயத்தை தூக்கி எறிந்துவிட்டு எதிர்த்து நடக்க ஆரம்பித்தேன் நான் இதுவரை செய்துகொண்டிருந்த அனைத்தையும் என் நண்பன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றார் அவன் என்னை பார்க்க நானும் அவனை பார்க்கின்றேன் அவனுக்கு அவளைப் பற்றி நன்றாகவே தெரியும் ஆனால் என் நண்பர்களை பொறுத்தவரை நான் அவளை காதலிக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் நான் காதலிக்கவில்லை அவளை பார்க்க பிடித்திருக்கின்றது அவள் பெயரைக் கேட்க பிடித்திருக்கின்றது மற்றபடி வேறு எதுவும் எனக்கு தோன்றவில்லை நாங்கள் இருவரும் அவளை நோக்கி நடந்து கொண்டிருந்தோம் அவளும் எங்களை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தாள் சிறிது தூரத்தில் அவள் என்னையும் எனது நண்பனையும் பார்க்கின்றாள் அருகில் வந்தவுடன் திடீரென என் நண்பன் உங்களது ஆசிரியர் அந்த அறையில் இல்லை என அவளிடம் கூறுகிறான் ஏனென்றால் அங்கு வேறு எந்த அறையும் இல்லை அவள் எப்படியும் ஆசிரியரை தேடி தான் செல்கிறான் என்பதை தெரிந்து என் நண்பன் அவளுக்கு உதவுகிறான் நான் இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டு அசையாமல் நிற்கின்றேன் அப்பொழுதுதான் எனக்கு ஒரு விஷயம் ஞாபகம் வந்தது என் நண்பன் சரியாக பார்க்கவில்லை அவளுடைய ஆசிரியர் அந்த அறையில் தான் இருக்கின்றார் உடனே நான் எந்த ஒரு பயமும் இல்லாமல் வாயை திறந்து இல்லை உங்களுடைய ஆசிரியர் அந்த ஆசிரியர் அறையில் தான் இருக்கிறார் என நான் கூற அதற்கு ஏதாவது பேசுவாள் என்று நான் காத்திருந்தேன் ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை முகம் என்னை பார்த்து திரும்பி நான் சொல்வதை கேட்டது பிறகு தலையை மட்டும் ஆட்டி அவள் அங்கிருந்து கிளம்பினான் நானும் என் நண்பனும் அதே இடத்தில் நின்று கொண்டு இருக்கின்றோம் அனைத்தும் வேகமாக முடிந்துவிட்டது அவள் சென்றவுடன் என் நண்பனை பார்த்து நீ சரியாக பார்க்கவில்லையா இல்லை வேண்டும் என்றே கூறினாயா என்று கேட்க அதற்கு அவன் தெரியாமல் தான் சொன்னேன் என்று கூறி ஒருவழியாக பேசி விட்டாயா என்று கேட்கிறான் ஆமா என்று கூறினேன் உடனே என் நண்பன் இதை பற்றி என்னுடைய நண்பர்கள் அனைவருக்கும் சொல்ல ஆரம்பித்தான் என்னை விட அவர்கள் சந்தோஷமாக இருந்தனர் ஆம் நான் பேசிவிட்டேன் ஆனால் அது அந்த அளவுக்கான நல்ல உரையாடல் இல்லை